ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தனது பேரரசர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

148

82 வயதாகும் ஜப்பான் பேரரசர் அஹிட்டோ, கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பேரரசர் பதவியிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார். 27 ஆண்டுகளாக அரசராக இருக்கும் அகிஹிட்டோ, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அகிஹிட்டோ அரசர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அவரது மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான நாருஹிட்டோ ஜப்பான் அரசராக அரியணை ஏறவுள்ளார்.