அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகமதாபாத் வந்து புல்லட் ரெயிலில் பயணிப்பேன். -ஷின்சோ அபே, ஜப்பான் பிரதமர்!

249

அதிவேக வழித்தட பாதைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உறுதி அளித்துள்ளார்.
அகமதாபாத் – மும்பை இடையே ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி செலவில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் நட்பு நாடாக ஜப்பான் திகழ்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
சிறப்புரை ஆற்றிய ஜப்பான் பிரதமர் அபே, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்பை ஜப்பான் தொடர்ந்து வழங்கும் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், ஷின்சோ அபேயும் காந்திநகரில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.