அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு சிறப்பான வரவேற்பு!

193

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறவுள்ள இந்தியா – ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அகமதாபாத் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், ஷின்சோ அபேயும், திறந்த ஜீப்பில் சாலை வழியாக 8 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை சந்தித்தனர். சபர்மதி ஆசிரமத்தை மோடியும், அபேயும் பார்வையிட்டு, காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அகமதாபாத்-மும்பை இடையேயான அதிவேக புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் இரண்டு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திட்டத்திற்கு ஜப்பான் 80 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.