திமிங்கலங்களை பார்த்து ரசிக்கும் ஜப்பானியர்கள்..!

118

கடலுக்குள் துள்ளிக் குதித்து விளையாடும் திமிங்கலங்களை பார்த்து, சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்து உள்ளனர். ஜப்பான் நாட்டில் பிரத்யேக படகு மூலம் கடலுக்குள் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள், அங்குள்ள திமிங்கலங்களை பார்த்து ரசிக்கின்றனர். மிகப்பெரிய உருவத்துடன் நீருக்குள் ராஜாவாக வலம் வரும் திமிங்கலங்கள், சிறு பிள்ளையாய் துள்ளிக் குதிப்பதும், நீரை கிழித்து கப்பலைப் போல் நீந்துவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இந்த காட்சி குழந்தைகள் உள்ளிட்ட படகில் சென்ற பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.