விண்ணில் செலுத்திய ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..!

416

ஜப்பானில் தனியார் விண்வெளி தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த நிறுவனம் முதன் முறையாக மொமொ -2 என்ற ராக்கெட்டை தயாரித்து விண்ணில் செலுத்தியது. 10 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராக்கெட், கொகைடோ தீவில் உள்ள தைகி சோதனை தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் தயாரித்து விண்ணல் ஏவிய ராக்கெட்டும் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.