ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜெர்மனி வீரர் மார்க் விப்லெரிடம் தோல்வி அடைந்தார்.

221

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜெர்மனி வீரர் மார்க் விப்லெரிடம் தோல்வி அடைந்தார்.
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜெர்மனி வீரர் மார்க் விப்லெரை சந்தித்தார்.
58 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21க்கு 18, 14க்கு 21, 19க்கு 21 என்ற செட் கணக்கில் மார்க் விப்லெரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.