ஜப்பான் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடு : மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார் ஷின்சோ அபே…!

355

ஜப்பான் பொதுத்தேர்தலில் சுதந்திர ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக பதவியேற்கயுள்ளார்.
வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் தலைமையிலான அரசு வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை நடத்த போவதாக ஷின்சோ அபே கடந்த மாதம் அறிவித்தார். இதனிடையே 465 இடங்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஷின்சோ அபே தலைமையிலான சுதந்திர ஜனநாயக கூட்டணி 312 இடங்களை கைபற்றி ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து ஷின்சோ அபேக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.