ஜப்பானில் கடந்த 4ஆம் தேதி புயல் தாக்கியதில் இதுவரை 35 பேர் உயிரிழப்பு..!

1206

ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியதால் கனமழை பெய்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 7-ஆக பதிவானது.

பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 15 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.