ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் | 91 ஆயிரம் கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

417

ஜப்பானில் 91 ஆயிரம் கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, சுமார் 10 லட்சம் கோழிகள் பறவைக் காய்ச்சல் நோய் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 91 ஆயிரம் கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, கோழி வளர்ப்பு மையங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.