ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த், ப்ரணாய் அதிர்ச்சி தோல்வி

328

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ப்ரணாய் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் டோக்கியோ நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணாய் காலிறுதிக்கு முன்னேறினர். இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், சீன வீரர் ஷி யுகியை எதிர்த்து களமிறங்கிய ப்ரணாய் 15க்கு 21, 14க்கு 21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதே போன்று மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சனை எதிர்த்து களமிறங்கினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டர் 17க்கு 21, 17க்கு 21 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா, சிந்து ஆகிய வீராங்கனைகள் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.