நிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

281

நிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகள் மற்றும் மத்திய-மாநில அரசின் வரவு, செலவு கணக்குகளில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை தற்போது நிதியாண்டாக கணக்கிடப்பட்டு வருகிறது. வரி விதிப்பு, நிதி மற்றும் பொருளாதார துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் மத்திய அரசு தற்போது நிதியாண்டு முறையிலும் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, 150 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் நிதியாண்டை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு தனது அறிக்கையை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதேபோன்று, நிதியாண்டை மாற்றுவது அவசியமானது என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிதியாண்டின் கணக்கு நடைமுறையால், குறைந்த அளவே வேலைச் சூழலை பயன்படுத்திக் கொள்ள முடிவதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நிதியாண்டு ஜனவரி மாதத்துக்கு மாற்றப்பட்டால், வரும் நவம்பர் மாதமே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.