ஜன் தன் சேமிப்புக்கணக்குகளிலிருந்து ரூ.5,500 கோடி திரும்ப எடுக்கப்பட்டுள்ளது.

338

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பிறகு ஜன் தன் சேமிப்புக்கணக்குகளிலிருந்து 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி தடை செய்தார். இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 27 கோடி ஜன்தன் சேமிப்புக்கணக்குகளில் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி மட்டும் 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஜனவரி 11 ஆம் தேதி இந்த தொகை 69 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்ததாக தெரிவித்துள்ள நிதியமைச்சகம், இதன் மூலம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.