ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம்

50

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்குகிறார்.

2010 ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்த ஷா பைசல் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். காஷ்மீரில் நடக்கும் அசாதாரணமான கொலைகள் மற்றும் இந்திய முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக அவர் போராட்டங்களை நடத்தினார். மேலும், ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகிய பொது அமைப்புக்களை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும் ஷா பைசல் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை இன்று தொடங்க உள்ளார். இவரது கட்சியில் அரசியல்வாதிகள் உட்பட இளைஞர்கள் பலர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.