ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற நூரி சாம்ப் நீர்வீழ்ச்சியின் பகுதியில் நிலவிவரும் வெப்பத்தால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

168

பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நூரி சாம்ப் என்ற நீர்வீழ்ச்சி.
முகலாய அரசர் ஜஹாங்கீர் மனைவியின் மேல் கொண்ட அன்பால், இந்த நீர்வீழ்ச்சிக்கு நூரி சாம்ப் என பெயரிட்டதாக கூறப்படுகிறது. இதில், சாம்ப் என்பது காஷ்மீரி மொழியில் நீர்வீழ்ச்சி என்பதாகும்.
தற்போது அங்கு நிலவிவரும் வெப்பத்தால் நீர்வீழ்ச்சியை தேடிவரும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

அங்கு வந்த சுற்றுலாபயணிகள் கூறும்போது, ஒரு முறை இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தால், மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இங்கு நிலவிவரும் வன்முறை சம்பவங்கள் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தினாலும், 1990 ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.