முதன் முதலாக காஷ்மீருக்கு செல்லும் நிர்மலா சீதாராமன் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எல்லைப் பகுதியில் ஆய்வு

251

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பயணம் மேற்கொள்கிறார்.

ராணுவ அமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நிர்மலா சீதாராமன் பயணம் செய்கிறார். முதலில் ஸ்ரீநகருக்கு செல்லும் அவர், நாளை உலகின் மிகவும் உயரமான பகுதியான சியாச்சிக்கும் செல்கிறார். இந்த பயணத்தின் போது, எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிர்மலா சீதாராமன், ராணுவ மூத்த அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சமீபத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு – காஷ்மீருக்கு பயணம் செய்த நிலையில், அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அங்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.