ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்…!

364

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தின் சம்பூரா கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சிலர் பதுங்கி இருக்கலாம் என்பதால், ராணுவ வீரர்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் தேடுதல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.