தமிழகம் முழுவதும் நாளை லாரிகள் இயங்காது… லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

249

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது என்றுதெரிவித்தார்.