ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்… ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
43

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரியில் இருந்து பேரணியாக சென்று ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதேபோன்று, கோவை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் மத்திய அரசை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY