ஜல்லிக்கட்டில் பங்கேற்க, ஆரோக்கியமான காளைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

276

மதுரை அடுத்த அவனியாபுரத்தில் வரும் 5-ம் தேதியும், பாலமேட்டில் வரும் 9-ம் தேதியும், அலங்காநல்லூரில் வரும்10-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3 முதல் 7 வயதுடைய காளைகளுக்கு, மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்
என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் நோய் அறிகுறிகள், மற்றும் உடல் பலவீனமாக இருக்கும் காளைகளுக்கு உடல் தகுதி சான்று வழங்கப்பட மாட்டாது என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களை வழங்க கூடாது, அவற்றின் திமில், உடல், மற்றும் கொம்புகள் மீது எண்ணெய், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றை தடவி அழைத்துவரக் கூடாது, கொம்புகளை கூர்மையாக்கி கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.