ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல மாநில மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

193

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உண்டு, அந்த வகையில் தமிழகத்தின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் தேசிய திருவிழா என்று சுட்டிக்காட்டி தருண் விஜய், இந்தியாவில் பல மாநிலங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் முயற்சியோடு ஜல்லிக்கட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், இது நிரந்தர தீர்வாக அமையும் என்று தருண் விஜய் திட்டவட்டமாக கூறினார்.