தமிழகத்தில் அவனியாபுரம், பலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

332

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது. இந்த நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர்கள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஜல்லிக்கட்டு விழாவுக்கு முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதியும், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 9 மற்றும் 10ம் தேதி நடைபெறும் என்று கூறிய விழா குழுவினர், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவ-மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.