ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்.

256

டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அடுத்த ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வரைவு அவசர சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அது, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அடுத்த ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.