தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு…. சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முட்டிமோதிய இளைஞர் பட்டாளம்

240

அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே கோயில் மாடுகளுக்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாடுகளை அலங்கரித்து கோயில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டன. முனியாண்டி கோயில், அரியமலை சாமி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு மாடுகள் அழைத்து செல்லப்பட்டன.

இவ்வாறு அழைத்து செல்லபட்ட காளைகளை திடீரென அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கும் முயற்சியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தடையை மீறி போட்டி நடத்தப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.