ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல் | திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப்போராட்டம்.

136

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தை வரவேற்பதாக கூறினார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் முன்னதாகவே கொண்டு வந்ததிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.