ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரணை : 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது

228

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியது தொடர்பான ஊழல் வழக்கு விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் செயல்படுகள் குறித்து நீதிபதி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றதில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.