ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டங்கள், ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

118

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீடிப்பதால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.பி.க்களும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுவடைந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.