ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தையும் பரிசீலிக்க வலியுறுத்தி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

296

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு தடைவிதித்தது- தமிழக அரசின் விடாமுயற்சியால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து விலங்குகள் நலவாரிய அமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபு சார்ந்தது என்பதால் காளைகளை செல்லபிராணிகளாக வீட்டில் வளர்த்து வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறுவது ஆதாரமற்றது என்பதால் ஜல்லிக்கட்டு மீதான இடைக்காலை தடையை நீக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.