உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

112

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்கியது.

தமிழர் திருநாளான பொங்கல் திருயாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி இன்று . அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு , முகூர்த்த கால் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமை யாளர்கள் உரிய பயிற்சி கொடுத்து வருவதாகவும் மாடுபிடி வீரர்களும் தயாராகி வருவதாக தெரிவித்தார்.பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுவார்கள் என்றும், காளைகளுக்கான பதிவு 12-ந்தேதியும், மாடுபிடி வீரர்களுக்கன பதிவு 13-ந்தேதியும் நடைபெறும் என்றும் ஆட்சியர் கூறினார்.