ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

139

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் விளையாட்டுகளில் துன்புறுத்தப்படுவதுபோன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலிருந்து காளையை உடனடியாக நீக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு வசதியாக அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.