ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

199

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். காட்சிப்படுத்தும் வனவிலங்குகள் பட்டியிலிருந்து காளை மாடுகளை நீக்கவேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வகையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேநேரம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருப்பதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.