பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ….

158

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ள செய்தியில், கள்ளநோட்டு, கருப்பு பண புழக்கம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றை ஒழிக்கவே, ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தாக தெரிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். மேலும், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பணப்பரிமாற்றம் பெருமளவு கட்டுபடுத்தப்பட்டு விட்டதாக கூறிய அவர், இதன் மூலம் டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருப்பதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் வாயிலாக, ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் 14 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.