சிறுத்தைப்புலி – முதலை இடையே உணவாக்குவதற்கான சண்டை…

676

ரேசில் நாட்டில் சிறுத்தைப்புலி மற்றும் முதலைக்கு இடையே உணவாக்குவதற்கான கடும் சண்டையை சுற்றுலா பயணிகள் திகிலுடன் கண்டு ரசித்தனர்.

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சிறுத்தைப்புலி அதிகளவில் காணப்படுகிறது. தண்ணீருக்குள் இறங்கி முதலையை வேட்டையாடும் தனித்தன்மை சிறுத்தைப்புலிக்கு உண்டு. இந்நிலையில் நீர்நிலை ஒன்றில் முதலையைப் பிடித்த சிறுத்தைப்புலி, அதனை கரைக்கு கொண்டு செல்ல முயன்றது. ஆனால் முதலையோ சிறுத்தைப்புலியை தண்ணீருக்குள் அமிழ்த்தி கொல்ல முயன்றது. இதனை சில சுற்றுலா பயணிகள் படகில் சென்று கொண்டிருந்த போது படம் பிடித்தனர். மேலும் உயிர் வாழ்வதற்கான இந்த சண்டையை சுற்றுலா பயணிகள் திகிலுடன் பார்த்தனர். இறுதியில் சிறுத்தைப்புலிக்கே உணவு கிடைத்தது.