வந்தவாசி அருகே நடிகர் ஜெகன் சென்ற கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலி..!

593

வந்தவாசி அருகே நடிகர் ஜெகன் சென்ற கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமம் அருகே நடிகர் ஜெகன் காரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உசேன் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உசேனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.