கிரிக்கெட் வீரர் ஜடஜா மனைவி மீது காவலர் தாக்குதல் – விசாரணை

380

குஜராத் மாநிலத்தில் கார் மூலம் விபத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, தனது மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த சஞ்சய் அகிர் என்ற காவலரின் பைக் மீது மோதியது. இதையடுத்து அவரை மீட்க சென்ற ரிவபாவை, சஞ்சய் அகிர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ரிவபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.