ஜாக்டோ-ஜியோ மூன்றாவது நாளாக உண்ணாவிரத்தை தொடர்ந்து ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

320

மூன்றாவது நாளாக நடைபெறும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டத்தின் போது, ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக நடைபெறும் இந்த போராட்டத்தில், சுமார் 1500 ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் ஜேசுராஜன் என்பவர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.