திட்டமிட்டப்படி ஜன.22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

198

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி திட்டமிட்டப்படி ஜனவரி 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 30-ம் தேதி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில், போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என ஜாக்டோ ஜியோ அறிவித்தது. ஆனால் தற்போது 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு தரப்பு தொடர்ந்து அவகாசம் கேட்டு இழுத்தடிப்பதால் மீண்டும் வேலைநிறுத்ததில் ஈடுபட முடிவு செய்யப்படுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தையும் ஜாக்டோ ஜியோ திரும்ப பெற்றது.