2வது நாளாக தொடரும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!

112

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் விடிய விடிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். சென்னை எழிலகம் வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் விடிய விடிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.