9-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தகவல்..!

492

முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 9-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர் மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூராக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, கூறினர். மேலும், முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 9-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர்.