ஜா குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கர்நாடகத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

177

ஜா குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கர்நாடகத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆய்வு செய்த ஜி.எஸ். ஜா தலைமையிலான காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவினர், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நேரில் ஆய்வு செய்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் காவிரி விவகாரம் குறித்து தொழில்நுட்பக் குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம், கர்நாடகத்திற்கு நிவாரணம் கிடைக்கும் என முதலமைச்சர் சித்தராமய்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.