ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

362

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவருக்கு சிலை அமைக்க அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் முயன்று வருகின்றனர். சிலை தயாரிக்கும் பணி, ஆந்திர மாநிலம் நட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த புகழ் பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிலை தயாரிப்பதில், வல்லுனர்களான அருண்குமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் இணைந்து ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்து வருகின்றனர். குறைவான எடையில், தத்ரூபமாக ஜெயலலிதாவின் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் சிலை தயாரிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.