ஜெயலலிதா மரணம் தொடர்பாக முக்கிய சாட்சிகள் மிரட்டப்படுவதாக, விசாரணை ஆணையத்திடம் ஜெ. தீபா புகார்..!

495

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முக்கிய சாட்சிகள் மிரட்டப்படுவதாக, விசாரணை ஆணையத்திடம் ஜெ. தீபா புகார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தீபாவின் கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்தநிலையில், தீபாவும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று ஆஜரானார். மூன்றரை மணி நேரம் நீடித்த விசாரணையின் போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா,ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் முக்கிய சாட்சிகள் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.