இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர், நிக்கோலஸை வீழ்த்தி, காலிறுதி போட்டிக்கு நடால் தகுதி

163

இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இத்தாலியின் ரோம் நகரில் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது மற்றும் காலிறுதிக்கான தகுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன், ஜார்ஜியா வீரர் நிக்கோலஸ் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அதிரடியாக விளையாடிய நடால் 6க்கு1, 6க்கு பூஜ்ஜியம் என்ற நேர்செட் கணக்கில் நிக்கோலஸை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதி போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.