துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

149

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டை வரவேற்க சுமார் 500 பேர் திரண்டு இருந்தனர்.
புத்தாண்டு பிறந்த நள்ளிரவு கொண்டாட்டங்களில் மக்கள் இருந்த போது, இரவு சுமார் 1.30 மணியளவில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
இதில், 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பின் இணையதள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.