மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

140

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். மாற்றுத்திறனாளியான இவரை, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளிகள், பிளம்பர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்கள் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வர, காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக, 24 பேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 17 பேர் மட்டும் கடந்த ஜூலை மாதம் கைது செய்து, போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், குற்றச்சாட்டப்பட்ட 17 பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.