ஐஆர்என்எஸ்எஸ் 1-எச் செயற்கைகோள் இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்!

332

கடல்சார் ஆராய்ச்சிக்கு பயன்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடல் சார் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை பயன்பாட்டுக்காக ஐஆர்என்எஸ்எஸ் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. ஏழு செயற்கைகோள்கள் ஏவப்பட்ட நிலையில், ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. எனவே, ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைகோளை வடிவமைத்துள்ள இஸ்ரோ, ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 6.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. 320 டன் எடையும் 44 மீட்டர் உயரம் கொண்ட பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம், ஆயிரத்து 425 கிலோ எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைகோள் ஏவப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.