இஸ்ரோ மையத்தை சுற்றி தாழ்வாக பறந்த கிளைடர் விமானம்!

411

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கூடுதல் பாதுகாப்பு உள்ள பகுதியில் அடிக்கடி கிளைடர் விமானம் தாழ்வாக பறப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம், நாங்குநேரி அருகே மத்திய கடற்படை தளம் மற்றும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மிகவும் பாதுகாப்பாக இந்த பகுதியில் அடிக்கடி கிளைடர் விமானம் தாழ்வாக பறக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சிறிது காலம் வராமல் இருந்த கிளைடர் விமானம், கடந்த 23ஆம் தேதி மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தை சுற்றி வட்டமிட்டுள்ளது. இதுகுறித்து படைவீரர்கள் தகவல் அளித்ததைத்தொடர்ந்து, கூடங்குளம் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணகுடி போலீஸாரும் தொடர்ந்து கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த பகுதியில், அடிக்கடி கிளைடர் விமானம் தாழ்வாக பறப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.