திட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

147

சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

சந்திராயன்-2 விண்கலம், இன்று காலை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இதனையொட்டி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 29, 30 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதியில் சந்திராயன்-2 விண்கலம் நிலவுற்கு அருகே செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட சிவன், தாய்வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்வது போல் சந்திராயன்-2 விண்கலத்தின் பயணம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 2-ம் தேதி சந்திராயன்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வு நடக்கவுள்ளதாக குறிப்பிட்ட சிவன், செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிக்கரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் என தெரிவித்தார். சந்திராயன்-2 விண்கலத்தின் ஒவ்வொரு கட்ட நகர்வையும் விஞ்ஞானிகள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக சிவன் தெரிவித்தார்.