இஸ்ரோ தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு விண்கலம். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் இன்ஜின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி.

282

மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் வகையில், இஸ்ரோ வடிவமைத்துள்ள விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கை கோள்களையும், அவற்றை ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. செயற்கை கொள்கவை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், பெரும் பொருட் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தொடர்ந்து பயன்படுத்தும் வகையில், மறுபயன்பாட்டு விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், 2ம் கட்ட சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இன்று காலை மறுபயன்பாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விமானத்தின் மாதிரி வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், 17 மீட்டர் நீளமும், ஒன்றே முக்கால்டன் எடையும் கொண்டது. முதல் பகுதி ராக்கெட்டாகவும், 2வது பகுதி விமானத்தின் முன்பகுதி போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3வது கட்ட சோதனையும் வெற்றிகரமாக முடிந்தால், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் மறுபயன்பாட்டு விண்கலம் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.