மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார்.

165

மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளார்.
அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், முதன்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு நாளை அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடியின் மூன்று நாட்கள் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதேநேரம், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் இந்திய பிரதமர்கள் யாரும் இதுவரை இஸ்ரேல் நாட்டுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.