இஸ்ரேல் நாட்டுக்கு இடம்பெயர்ந்து வரும் பெலிக்கன் வகை பறவைகள் | பறவைகளை பராமரிக்க இஸ்ரேல் நிதி ஒதுக்கீடு…!

307

இஸ்ரேல் நாட்டுக்கு இடம்பெயர்ந்து வரும் ஆயிரக்கணக்கான பெலிக்கன் பறவைகளை பராமரிக்க, அந்நாட்டு வேளாண்மை அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நீர் பறவைகளுக்கான சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு பறந்து செல்லும் வழியில் இளைப்பாறுவதற்காக இந்த சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பெலிக்கன் நீர் பறவைகள் ஆண்டுதோறும் தங்குவது வழக்கம். அவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பெலிக்கன் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
பெலிக்கன் வகை நீர் பறவைகளை பராமரிக்கும் வகையிலும், பறவைகளுக்கு உணவளிக்கும் வகையிலும், இஸ்ரேல் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.